Questions - 65

Attempt Questions - 65: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'கனகச்சுனை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

    • A. கனகம் + சுனை
    • B. கனம் + சுனை
    • C. கனகச் + சுனை
    • D. கனக + சுனை
  2. முரலும் என்பதன் பொருள்

    • A. பறக்கும்
    • B. அமரும்
    • C. நடனமாடும்
    • D. முழங்கும்
  3. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ____________தகுதி அறிந்து பேச வேண்டும்.

    • A. பொருளின்
    • B. சொல்லின்
    • C. அவையின்
    • D. பாடலின்
  4. Translate - கூடைமுடைதல்

    • A. Artisan
    • B. Basketry
    • C. Rite
    • D. Knitting
  5. இரவும் பகலும் -

    • A. உம்மைத்தொகை
    • B. அன்மொழித்தொகை
    • C. உவமைத்தொகை
    • D. எண்ணும்மை
  6. கலித்தொகை எந்தப் பாவகையால் ஆன நூலாகும்?

    • A. கலிப்பா
    • B. ஆசிரியப்பா
    • C. வெண்பா
    • D. வஞ்சிப்பா
  7. நம்மை ____________பொறுத்துக் கொள்ள வேண்டும்.

    • A. மகிழ்வாரை
    • B. புகழ்வாரை
    • C. இகழ்வாரை
    • D. அகழ்வாரை
  8. "தேவாரம்" - இந்நூலைத் தொகுத்தவர் யார்?

    • A. திருநாவுக்கரசர்
    • B. நம்பியாண்டார் நம்பி
    • C. சுந்தரர்
    • D. திருஞானசம்பந்தர்
  9. 'செம்மரம்' என்னும் சொல் ____________த்தொகை.

    • A. உம்மை
    • B. வினை
    • C. அன்மொழி
    • D. பண்பு
  10. 'பாடறிந்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

    • A. பா + அறிந்து
    • B. பாடு + அறிந்து
    • C. பாட் + அறிந்து
    • D. பாட்டு + அறிந்து
  11. பானை செய்தலை எவ்வாறு சொல்வது மரபு?

    • A. பானை புனைதல்
    • B. பானை வடித்தல்
    • C. பானை செய்தல்
    • D. பானை வனைதல்
  12. "டெரகோட்டா" (Terracotta) என்பதன் பொருள் என்ன?

    • A. பளபளப்பான கண்ணாடி
    • B. உலோகம் கலந்த மண்
    • C. சுடுமண்
    • D. வெட்டப்பட்ட கல்
  13. கைவினைப் பொருள்கள் செய்வதற்கு ஏற்றவை எது?

    • A. கூட்டு மூங்கில்
    • B. சாதாரண மூங்கில்
    • C. கல் மூங்கில்
    • D. மலை மூங்கில்
  14. 'கசடற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

    • A. கசடு + உற
    • B. கசடு + அற
    • C. கச + டற
    • D. கசட + அற