Questions - 48

Attempt Questions - 48: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'நாடென்ப' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது..

    • A. நான் + என்ப
    • B. நா + டென்ப
    • C. நாடு + என்ப
    • D. நாடு + டென்ப
  2. பொருள் தருக - வன்சொல்

    • A. கடுஞ்சொல்
    • B. இனிய சொல்
    • C. மென்மையான சொல்
    • D. நகைச்சுவைச் சொல்
  3. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது என்ன?

    • A. கலிப்பா
    • B. வெண்பா
    • C. விருத்தம்
    • D. அந்தாதி
  4. Translate - நற்பண்பு

    • A. Ambition
    • B. Wealth
    • C. Courtesy
    • D. Neighbour
  5. உவமை வேறு, உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது எந்த அணி?

    • A. உருவக அணி
    • B. சொற்பொருள்பின்வருநிலையணி
    • C. இயல்புநவிற்சியணி
    • D. உவமையணி
  6. பூதத்தாழ்வாரின் பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் எவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளன?

    • A. திருவாய்மொழி
    • B. மூன்றாம் திருவந்தாதி
    • C. இரண்டாம் திருவந்தாதி
    • D. முதல் திருவந்தாதி
  7. 'மகளிர்' என்பதன் எதிர்பாலுக்குரிய பெயர் எது?

    • A. பெண்கள்
    • B. ஆடவர்
    • C. பெண்டிர்
    • D. தாய்மார்
  8. "செல்வத்துப் பயனே ஈதல்" எனக் கூறுவது எந்த நூல்?

    • A. திருக்குறள்
    • B. நாலடியார்
    • C. புறநானூறு
    • D. அகநானூறு
  9. மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் யார்?

    • A. தவத்திரு குன்றக்குடி அடிகளார்
    • B. மறைமலை அடிகளார்
    • C. திரு.வி.க
    • D. வள்ளலார்
  10. பால் எத்தனை வகைப்படும்?

    • A. மூன்று வகை
    • B. நான்கு வகை
    • C. ஆறு வகை
    • D. ஐந்து வகை
  11. சொற்களைப் பிரித்தால் பொருள் தராத சொல் எது?

    • A. அடுக்குத்தொடர்
    • B. ஆகுபெயர்
    • C. இரட்டைக்கிளவி
    • D. உவமை
  12. ஜென் சிந்தனையாளர்கள் யாருடைய ஒரு பிரிவினராகக் கருதப்படுகின்றனர்?

    • A. சமண மதத் துறவியர்
    • B. புத்த மதத்தைச் சார்ந்த துறவியர்
    • C. சைவத் துறவியர்
    • D. வைணவத் துறவியர்