10th Standard - இயல் ஒன்று

Attempt 10th Standard - இயல் ஒன்று: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. ‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.

    • A. வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
    • B. பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
    • C. ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
    • D. வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
  2. ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது.

    • A. இலையும் சருகும்
    • B. தோகையும் சண்டும்
    • C. தாளும் ஓலையும்
    • D. சருகும் சண்டும்
  3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.

    • A. எந் + தமிழ் + நா
    • B. எந்த + தமிழ் + நா
    • C. எம் + தமிழ் +நா
    • D. எந்தம் + தமிழ் + நா
  4. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே.

    • A. பாடிய ; கேட்டவர்
    • B. பாடல் ; பாடிய
    • C. கேட்டவர் ; பாடிய
    • D. பாடல் ; கேட்டவர்
  5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

    • A. குலை வகை
    • B. மணி வகை
    • C. கொழுந்து வகை
    • D. இலை வகை