இலக்கணம் - 95
Attempt இலக்கணம் - 95: 28 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
அரம் மற்றும் அறம் ஆகிய சொற்களின் சரியான பொருள் யாது?
- A. அரம் - தருமம்; அறம் - கருவி
- B. அரம் - கூர்மைப்படுத்தும் கருவி; அறம் - தருமம்
- C. அரம் - அன்பு; அறம் - அறிவு
- D. அரம் - ஒழுக்கம்; அறம் - ஆயுதம்
காரணப் பொதுப்பெயருக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு எது?
- A. மரம், மண்
- B. பறவை, அணி
- C. வாழை, தென்னை
- D. கல், முள்
பொருத்துக: அ - ஆ 1. தண்டருள் - அ. தொண்டு 2. கூர் - ஆ. சான்றோருக்கு 3. செம்மையருக்கு - இ. குளிர்ந்த கருணை 4. ஏவல் - ஈ. மிகுதி
- A. 1–இ, 2–ஈ, 3–ஆ, 4–அ
- B. 1–ஈ, 2–அ, 3–ஆ, 4–இ
- C. 1–ஆ, 2–இ, 3–ஈ, 4–அ
- D. 1–அ, 2–ஆ, 3–இ, 4–ஈ
'சோம்பல்' என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் எது?
- A. அழிவு
- B. துன்பம்
- C. சுறுசுறுப்பு
- D. சோகம்
தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
- A. தம்முயிர்
- B. தமதுயிர்
- C. தம்உயிர்
- D. தம்முஉயிர்
பொருத்துக: அ-ஆ 1. அறக்கட்டளை - அ. Volunteer 2. தன்னார்வலர் - ஆ. Junior Red Cross 3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் - இ. Trust
- A. 1–இ, 2–ஆ, 3–அ
- B. 1–ஆ, 2–இ, 3–அ
- C. 1–இ, 2–அ, 3–ஆ
- D. 1–அ, 2–ஆ, 3–இ
'தானென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
- A. தானெ + என்று
- B. தான் + என்று
- C. தா + னென்று
- D. தான் + னென்று
தமிழ் மொழியின் உபநிடதம் என்று போற்றப்படும் நூல் எது?
- A. திருக்குறள்
- B. தாயுமானவர் பாடல்கள்
- C. சிலப்பதிகாரம்
- D. மணிமேகலை
Scouts & Guides என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. சாரண சாரணியர்
- B. ஆசிரியர் மாணவர்
- C. தலைவர் தொண்டர்
- D. விளையாட்டு வீரர்கள்
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் இடுகுறிப்பெயர் எது?
- A. பறவை
- B. மண்
- C. முக்காலி
- D. மரங்கொத்தி
இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
- A. இன்புற்றிருக்க
- B. இன்புற்றுறிருக்க
- C. இன்புற்றுஇருக்க
- D. இன்புறு இருக்க
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் காரணப்பெயர் எது?
- A. மரம்
- B. வளையல்
- C. சுவர்
- D. யானை
'ஆறு' என்ற சொல்லிற்கு இரு பொருள்கள் யாவை?
- A. மலை, கடல்
- B. நதி, எண்
- C. குளம், எண்
- D. நதி, குளம்
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் இடுகுறிச்சிறப்புப் பெயர் எது?
- A. வயல்
- B. வாழை
- C. மீன்கொத்தி
- D. பறவை
'நகை' என்ற சொல்லின் இருபொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
- A. கை, பொன்
- B. மகி, செல்வம்
- C. அழகு, அன்பு
- D. சிரிப்பு, ஆபரணம்
கூற்று: ஆய்த எழுத்து தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். காரணம்: முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.
- A. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
- B. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
- C. கூற்று சரி; காரணம் தவறு
- D. கூற்று தவறு; காரணம் சரி.
'காவியா பள்ளிக்குச் சென்றாள்' என்பது எந்தப் பெயர்ச்சொல்லைக் குறிக்கிறது?
- A. பொருட்பெயர்
- B. இடப்பெயர்
- C. காலப்பெயர்
- D. சினைப்பெயர்
எது தனித்து இயங்காது?
- A. உயிர் எழுத்து
- B. மெய் எழுத்து
- C. ஆய்த எழுத்து
- D. உயிர்மெய் எழுத்து
'திங்கள்' என்ற சொல்லின் இருபொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
- A. நிலவு, மாதம்
- B. வானம், இரவு
- C. நட்சத்திரம், ஆண்டு
- D. சூரியன், நாள்
பொருத்துக அ ஆ 1. கண்டம் - அ. Migration 2. தட்பவெப்பநிலை - ஆ. Sanctuary 3. வலசை - இ. Continent 4. புகலிடம் - ஈ. Climate
- A. 1–இ, 2–ஈ, 3–அ, 4–ஆ
- B. 1–ஈ, 2–அ, 3–ஆ, 4–இ
- C. 1–ஆ, 2–இ, 3–ஈ, 4–அ
- D. 1–அ, 2–ஆ, 3–இ, 4–ஈ
'காவியா மாலையில் விளையாடினாள்' என்பதில் 'மாலை' என்பது எதைக் குறிக்கிறது?
- A. பண்புப்பெயர்
- B. தொழிற்பெயர்
- C. காலப்பெயர்
- D. சினைப்பெயர்
'காவியா தலை அசைத்தாள்' என்பதில் 'தலை' என்பது எந்தப் பெயர்ச்சொல்?
- A. சினைப்பெயர்
- B. பொருட்பெயர்
- C. இடப்பெயர்
- D. பண்புப்பெயர்
'Gravitational Field' என்பதன் தமிழாக்கம் எது?
- A. புவிஈர்ப்பு விசை
- B. புவிஈர்ப்புப்புலம்
- C. புவிஈர்ப்பு முடுக்கம்
- D. புவிஈர்ப்பு ஆற்றல்
ஆய்த எழுத்தின் வேறு பெயர் எது?
- A. உயிரெழுத்து
- B. முப்பாற்புள்ளி
- C. மெய்யெழுத்து
- D. உயிர்மெய்யெழுத்து
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எழுத்துகளின் வகைகள் எவை?
- A. முதல் எழுத்துகள் மற்றும் சார்பு எழுத்துகள்
- B. உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகள்
- C. முதல் எழுத்துகள் மற்றும் உயிர் எழுத்துகள்
- D. சார்பு எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகள்
முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- A. முதல் எழுத்துகள்
- B. சார்பெழுத்துகள்
- C. உயிர் எழுத்துகள்
- D. மெய் எழுத்துகள்
கூற்று: உயிரெழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். காரணம்: பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருப்பதால் முதலெழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.
- A. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
- B. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
- C. கூற்று சரி; காரணம் தவறு.
- D. கூற்று தவறு; காரணம் சரி.
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
- A. எட்டு
- B. ஒன்பது
- C. பத்து
- D. பன்னிரண்டு