இலக்கணம் - 84

Attempt இலக்கணம் - 84: 21 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று பாடியவர் யார்?

    • A. கவிமணி
    • B. பாரதிதாசன்
    • C. பாரதியார்
    • D. திருவள்ளுவர்
  2. 'Covet all lose all' என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?

    • A. தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
    • B. பேராசை பெருநட்டம்
    • C. முள்ளை முள்ளால் எடு
    • D. குறை குடம் கூத்தாடும்
  3. ஓர் எழுத்து அல்லது பல எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?

    • A. பதம்
    • B. மொழி
    • C. சொல்
    • D. கிளவி
  4. சொல் என்பதற்கு இணையான பொருள் தரும் சொற்கள் எவை?

    • A. பதம், மொழி, கிளவி
    • B. எழுத்து, சொல், பொருள்
    • C. தனித்து, தொடர்ந்து, பொருள்
    • D. எழுத்து, பதம், கிளவி
  5. பகுக்கவியலும் பதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • A. பகாப்பதம்
    • B. பகுபதம்
    • C. தனிமொழி
    • D. இரட்டைக்கிளவி
  6. மொழி எத்தனை வகைப்படும்?

    • A. இரண்டு
    • B. மூன்று
    • C. நான்கு
    • D. ஐந்து
  7. 'East or west, home is the best' என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?

    • A. எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது
    • B. தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
    • C. குறை குடம் கூத்தாடும்
    • D. முள்ளை முள்ளால் எடு
  8. முக்கனி என்று அழைக்கப்படுபவை எவை?

    • A. மா, பலா, வாழை
    • B. ஆப்பிள், திராட்சை, மாதுளை
    • C. கொய்யா, பப்பாளி, நெல்லி
    • D. மா, ஆப்பிள், பலா
  9. 'இருதிணை' என்பதில் அடங்குபவை எவை?

    • A. உயர்திணை, அஃறிணை
    • B. நல்வினை, தீவினை
    • C. தன்வினை, பிறவினை
    • D. உயர்திணை, பிறவினை
  10. முத்தமிழ் எவற்றைக் குறிக்கும்?

    • A. அறம், பொருள், இன்பம்
    • B. இயல், இசை, நாடகம்
    • C. தன்மை, முன்னிலை, படர்க்கை
    • D. சேரர், சோழர், பாண்டியர்
  11. ஐம்பொறிகளில் ஒன்று எது?

    • A. மெய்
    • B. குறிஞ்சி
    • C. ஆண்பால்
    • D. கிழக்கு
  12. மூவேந்தர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?

    • A. குறிஞ்சி, முல்லை, மருதம்
    • B. தன்மை, முன்னிலை, படர்க்கை
    • C. சேரர், சோழர், பாண்டியர்
    • D. ஆண்பால், பெண்பால், பலர்பால்
  13. ஐம்பால் எவை?

    • A. மெய், வாய், மூக்கு, கண், செவி
    • B. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
    • C. ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
    • D. அறம், பொருள், இன்பம்
  14. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'பெயரெச்சம்' எது?

    • A. கயல்விழி
    • B. கோதை
    • C. படித்த
    • D. பெயரெச்சம்
  15. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் 'நிகழ்காலப் பெயரெச்சம்' எது?

    • A. படித்த கயல்விழி
    • B. படிக்கின்ற கயல்விழி
    • C. படிக்கும் கயல்விழி
    • D. சென்ற கோதை
  16. 'செல்லும் கோதை' என்பது எந்தப் பெயரெச்ச வகையைச் சார்ந்தது?

    • A. இறந்தகாலப் பெயரெச்சம்
    • B. நிகழ்காலப் பெயரெச்சம்
    • C. எதிர்காலப் பெயரெச்சம்
    • D. முக்காலப் பெயரெச்சம்
  17. எவ்விடம் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. எவ் + இடம்
    • B. எ + இடம்
    • C. எவ்வி + டம்
    • D. எவ்விடம் + அ
  18. குடும்ப விளக்கு யாருடைய படைப்புகளுள் ஒன்று?

    • A. பாரதியார்
    • B. பாரதிதாசன்
    • C. சுரதா
    • D. வாணிதாசன்
  19. இராமன் வந்தான், கண்ணன் நடந்தான் ஆகிய தொடர்களில் வினைச்சொற்கள் எவை?

    • A. இராமன், கண்ணன்
    • B. வந்தான், நடந்தான்
    • C. இராமன், வந்தான்
    • D. கண்ணன், நடந்தான்
  20. வினைமுற்று என்னும் சொல் வேறு எவ்வாறு வழங்கப்படுகிறது?

    • A. முற்றுவினை
    • B. பெயர்முற்று
    • C. வினைச்சொல்
    • D. முற்றுச்சொல்
  21. 'Empty vessels make the greatest sound' என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?

    • A. எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது
    • B. முள்ளை முள்ளால் எடு
    • C. குறை குடம் கூத்தாடும்
    • D. பேராசை பெருநட்டம்